×

கல்பாலம் கூட்டுரோடு-குண்டாலம் இடையே ₹1.17 கோடியில் தார் சாலைப்பணி தொடக்கம்

தேன்கனிக்கோட்டை, அக். 16: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அகலகோட்டை ஊராட்சி கல்பாலம் கூட்டுரோடு முதல் கல்குட்டை, தம்பூரிதொட்டி, குரிமந்தை, குண்டாலம் வரை சாலை வசதி இல்லாததால் குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழைகாலங்களில் சாலையில் சென்று வரமுடியாத அளவிற்கு குழிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கும். கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி. பிரகாஷ் எம்எல்ஏ சட்டமன்றத்திலும், கலெக்டரிடமும் பேசி, கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ₹1.17கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதையொட்டி நேற்று சாலை அமைக்கும் பணிகளை தளி.பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

 அகலகோட்டை ஊராட்சியில் சாலை மற்றும் குடிநீர் பிரச்சனையை சீர் செய்ய எம்எல்ஏவிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி குடிநீர் பிரச்சனையை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், கல்பாலம் சாலை புதிப்பிக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் திவாகர், சீனிவாசலுரெட்டி, ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், பொருளாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேணு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர், துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பைரவாமூர்த்தி, சீனிவாசன், ராமகிருஷ்ணன், சிவா, சந்துரூ, ஆனந்தன், சிக்கே கவுடா, மாவட்ட பிரதிநிதி கெம்பண்ணா, நாராயணனசாமி, நாகிரெட்டி, பத்ரேகவுடா, சதீஸ், காந்தன், முனியப்பன் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kundal ,Kalpalam ,
× RELATED செலனம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணி