×

அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

மானாமதுரை, அக். 16:  மானாமதுரை அருகே, தெ.புதுக்கோட்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 87வது பிறந்த நாள் விழா மற்றும் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமை வகித்து, ‘அப்துல் கலாம் மாணவர்களுக்கு கூறிய கருத்துக்களை எடுத்து கூறினார். மாணவிகள் குணஸ்ரீ, கற்பகஸ்ரீ ஆகியோர் மாணவர்களுக்கு அப்துல்கலாம் கூறிய அறிவுரைகள்,

அவர் காட்டிய லட்சிய வழியில் பீடுநடை போட வேண்டும் என பேசினர். சொற்பொழிவாற்றிய மாணவர்களுக்கு ‘அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறும் கனவும்’ என்ற புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய மாணவர்ளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி ஆசிரியை தெய்வானை நன்றி கூறினார்.

Tags : Abdulkalam ,birthday party ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...