×

கயத்தாறில் இன்று கட்டபொம்மன் சிலைக்கு அமைச்சர் மாலை

தூத்துக்குடி, அக். 16: வீரபாண்டிய கட்டபொம்மன் 219வது நினைவு நாளை முன்னிட்டு  கயத்தாறு மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று (16ம் தேதி) காலை 10 மணிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். தொடர்ந்து கயத்தாறு ஒன்றியம் வானரம்பட்டியிலும், கோவில்பட்டி ஒன்றியம் பாண்டவர்மங்கலத்திலும் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சி கூடங்களையும் அமைச்சர், கலெக்டர் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். இத்தகவலை தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Tags : idol ,Kattabomman ,
× RELATED மதுரையில் உலகாணி கிராமத்தில் உள்ள...