×

குமரியில் கனமழை நீடிப்பு அக்.14 வரை மீன்பிடிக்க தடை

நாகர்கோவில், அக்.12: அரபிக்கடலில் ‘லூபான்’ புயல், வங்க கடலில் ‘டிட்லி’ புயல் ஆகியவற்றின் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை கொட்டியது. நேற்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்பட்டது.
 இதற்கிடையே அரபிக்கடலில் 160 கி.மீ வேகத்தில் வீசி வருகின்ற லூபான் புயல்காற்று இரு தினங்களில் ஓமன் கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக 14ம் தேதி வரை மீனவர்கள் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Banerjee ,
× RELATED மேற்குவங்கத்தில் ஒபிசி சான்றிதழ்கள்...