×

திருப்புறம்பியத்தில் பாமக கொடியை கிழித்து அரை கம்பத்தில் கட்டி வைப்பு

கும்பகோணம், அக். 12: கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் கடைத்தெருவில் பாமக கொடிக்கம்பம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாமக கொடிகம்பத்தில் இருந்த கொடியை இரண்டாக கிழித்து அதை அரை கம்பத்தில் மர்மநபர்கள் கட்டி வைத்தனர். நேற்று காலை வந்தபோது பாமக கட்சிக்கொடியை மர்மநபர்கள் கிழித்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பாமகவினர் திரண்டனர். இந்த தகவல் கிடைத்ததும் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் சுவாமிமலை காவல் நிலையத்தில் திருப்புறம்பியம் பாமக நிர்வாகி மகாலிங்கம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாமக கொடியை மர்மநபர்கள் கிழித்ததை கண்டித்து திருப்புறம்பியம் பகுதியில் உள்ள வணிகர்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags :
× RELATED திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்