×

மவுண்ட் சீயோன் இன்ஜி. கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை

புதுக்கோட்டை, அக்.12: மாநில அளவிலான செயல்திட்ட கண்காட்சியில் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை இறுதியாண்டு மாணவர்  முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். திருமயம் அருகே சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செயல்திட்ட கண்காட்சி எக்ஸ்போ -18 அன்மையில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை இறுதியாண்டு மாணவர் தினேஷ்குமார் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவரை மவுண்ட்சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர்  ஜெயபாரதன் செல்லையா, துணைத்தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன், கல்லூரி இயக்குனர் ஜெய்சன் ஜெயபாரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ஜெய்சன், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர்  ராபின்சன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags : Mount Zion Inc. ,College student ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது