×

பொதுமக்கள் போராட்டத்தால் 5 முறை மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததால் மக்கள் அதிர்ச்சி

திருப்பூர், அக். 12:  திருப்பூர்  பி.என்.ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் உழவர் சந்தை அருகே 5 முறை பொது மக்களின் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பூர்  பி.என்.ரோடு புதிய பஸ்ஸ்டாண்ட், உழவர் சந்தை அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாலும், பள்ளி, கோயில்கள் உள்ளதாலும் இதனை மூட பொதுமக்கள் வலியுறுத்தினர். மக்களின் எதிர்ப்பை மீறி இந்த கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் 5 முறை திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டது.

இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 5ம் தேதி இந்த டாஸ்மாக் கடை  மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மக்களின் எதிர்ப்பை உதாசீனப்படுத்தி வரும் டாஸ்மாக் அதிகாரிகளை கண்டித்தும், இந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் போராட்டக்குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் வரும் 16 ம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : reopening ,Tasmag ,civilians ,times ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை