×

விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, அக். 12:  பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், பேருந்து நிலையத்தில் தண்ணீர் நிற்காமல் உயரம் தூக்கி நிரந்தரமாக சீரமைக்க வேண்டும், திருக்குள ஆக்கிரமிப்பை பாரபட்சமின்றி முற்றிலும் அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பாரதவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாநில துணை செயலாளர்கள் குணத்தொகையான், கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இணை செயலாளர் முருகையன் நன்றி கூறினார்.

Tags : Visiga ,
× RELATED திருமா பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்