×

கெடிலம் ஆற்றை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

பண்ருட்டி, அக். 12: பண்ருட்டி அடுத்த திருவதிகையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான திருவதிகை அணைகட்டு உள்ளது. அணைக்கட்டு அருகில் ஏராளமான கருவேல முட்புதர்கள் வளர்ந்துள்ளன. மேலும் மரங்கள் அதிகளவு முறிந்து கீழே விழுந்துள்ளன. அகற்றுவதற்கு கூட பணியாளர்கள் முன்வரவில்லை. இந்த பகுதியில் இருந்து பணிக்கன்குப்பம், சேமகோட்டை, திருவாமூர் வரை கெடிலம் ஆற்றில் முட்புதர்கள் படர்ந்து வளர்ந்துள்ளது. பொக்லைன் மூலம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் மழை காலத்தில் மழைநீர் செல்ல ஏதுவாக இருக்கும்.இதே நிலை நீடித்தால் வெள்ளம் ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழை முன்னெச்சரிக்கையாக ஆற்றில் எந்தவொரு வேலையும் செய்யவில்லை. இதேபோல் ஏராளமான ஏரிகளில் கூட முட்புதர்கள் வளர்ந்துள்ளன. எனவே விரைந்து செயல்பட்டு ஆற்றில் உள்ள புதர்களை அகற்றி வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : kadiram river ,
× RELATED பெண் தூக்கிட்டு தற்கொலை