×

மானூர் காவல் நிலையம் இடமாற்றம்

மானூர், அக். 11:  மானூர் காவல் நிலையம், மானூர் பஜாரில் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் பழைய கட்டிடம் என்பதால் மழை காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் ஒழுகும் நிலை காணப்பட்டது. இருப்பினும் காவலர்கள் முயற்சியால், கோப்புகள் பாதுகாக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கட்டிடத்தில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு காவலர்களுக்கும், புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவியது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையில் காவல் நிலையத்தின் மையப்பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சம்பவத்தின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து காவல் நிலையத்தை இடமாற்றம் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.  அதன்படி மானூர் குடியிருப்பு பகுதியிலுள்ள அரசு மகளிர் பள்ளி அருகே தனியார் கட்டிடத்திற்கு காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று முதல் இயங்கி வருகிறது.
இடிந்து விழுந்த பழைய கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு அதே இடத்தில் காவல் நிலையம் புதிதாக கட்டப்படும் என காவல்துறை வட்டாரங்கள்
தெரிவித்து உள்ளன.

Tags : Manor ,police station transfer ,
× RELATED நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் மானூர்...