×

எனது கணவரால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பேட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம்

திருவண்ணாமலை, அக்.12: எனது கணவரால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறினார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி நேற்று அண்ணாமலையார் மற்றும் அம்மன் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து அம்மன் சன்னதி எதிரே நெய் தீபம் ஏற்றி வழிபட்டார்.

அப்போது, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தேன். எனது கணவர் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவு தினம் வரும் 18ம் தேதி வருகிறது. அன்றைய தினம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட உள்ளது. அன்று அனைத்து தரப்பு தமிழ் மக்களும் வந்து நினைவஞ்சலி செலுத்துமாறு கேட்டுகொள்கிறேன்.எனது கணவர் இருந்த போது, கர்நாடகத்தில் காவிரி பிரச்னைஉட்பட எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் இருந்தது. இன்று தமிழ்நாட்டில் குடி தண்ணீர் கிடையாது. எல்லா பகுதியு வறண்டு போய் உள்ளது.
சமீபத்தில் சண்முகப்பிரியா என்ற பெண் வீரப்பனை பிடிக்க உதவிய எனக்கு, அரசு ₹5 கோடி தருவதாக கூறிவிட்டு தற்போது தராமல் ஏமாற்றிவிட்டது என்று கூறி வருகிறார்.

அப்படி அவருக்கு தமிழக அரசோ, மத்திய அரசோ நிதி வழங்கினால், எனது கணவரால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகிறது. அவர்களுக்கு அரசு அறிவித்த தொகையை வழங்க வேண்டும். இதற்காக தனி கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.விசாரணை உறுதியான பின்பும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை. இதையும் மீறி சண்முகபிரியாவிற்கு நிதி அளித்தால் அனைத்து தரப்பு பாதிக்கப்பட்ட மக்களையும் திரட்டி சென்னை தலைமை செயலகம், சேலம் கலெக்டர் அலுவலகம் முன போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Muthulakshmi ,Veerappan ,families ,Swami Darshan ,Thiruvannamalai Annamalaiyar temple ,
× RELATED டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி...