சாராயம் விற்றவருக்கு குண்டாஸ்

திருக்கழுக்குன்றம், அக்.12:கல்பாக்கம் அருகே தொடர்ந்து சாராயம் விற்றவர் ஓராண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.  கல்பாக்கம் அடுத்த நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக கடந்த மாதம் 7ம் தேதி சதுரங்கப்பட்டிணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு திடீர் சோதனைக்கு சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த முருகனை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையிலடைத்தனர்.கைது செய்யப்பட்ட முருகன் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளதால் அவரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில் முருகனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories:

More
>