×

தொலை தூரக்கல்வியில் எம்.எட்., படிப்பை கொண்டு வரவேண்டும் முதுகலை ஆசிரியர்கள் அமைச்சருக்கு கோரிக்கை3

நாமக்கல், அக்.11: முதுகலை ஆசிரியர்களின் நலனுக்காக தொலை தூரக்கல்வியில், எம்.எட்., படிப்பை கொண்டு வரவேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெருபாலானவர்கள், தங்களது பாடத்தில் முதுநிலைப்பட்டமும், கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்று பணியில் சேர்ந்தவர்கள். அரசு பள்ளியில், முதுகலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் எம்.எட்., எம்.பில்., ஆகிய இரண்டு உயர்படிப்புகளைப் படித்தால், 2 ஊக்க ஊதியம் பெறலாம் என்று அரசாணை உள்ளது.

இதில் எம்.பில்., பட்டம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எம்.எட்., பட்டப்படிப்பு, கடந்த 10 ஆண்டுக்கு மேலாக எந்த பல்கலைக்கழகத்திலும் தொலைதூரக் கல்வியில் பயிற்றுவிக்கப்படவில்லை. எம்.எட்., படிப்பு அவசியமான ஒன்றாக தேவைப்படுகிறது. முதுகலை ஆசிரியர்கள் 2வது ஊக்க ஊதியம் பெறவும் உறுதுணையாக இருக்கிறது. எனவே, தமிழக அரசு, டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைதூரக்கல்வியில் எம்.எட்., படிப்பைக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமு தெரிவித்துள்ளார்.

Tags : M.Tech ,Master Teachers ,
× RELATED M.E, M.Tech படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன்...