×

ராகி பயிரில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கிருஷ்ணகிரி, அக்.11: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாரத்தில் தற்போது 6,500 ஹெக்டேரில் மானாவரி ராகி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது ராகியில் பரவலாக குலைநோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து வருமானம் பாதிக்கப்படுகிறது. இதற்கான தடுப்பு முறைகளை பயன்படுத்தி நோயில் இருந்து ராகி பயிரை காத்துக்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
 நோய் தாக்குதலை பொறுத்தமட்டில், ராகி பயிர் இலைகளில் சிறிய பழுப்பு நிற வட்டப்புள்ளிகள் தோன்றும். பின் பெரிய நீள்சுழல் வடிவ பகுதிகளாக மாறி இலைகள் காய்ந்துவிடும். குலை நோயின் மூலமாகவே கதிர் காம்புகளில் அதிக சேதம் ஏற்படுகிறது. பின் கருப்பு நிறமாக மாறுகிறது. நோய் தொற்றானது கதிர் பகுதி, அடிதள கிளைப்பகுதி, தண்டுபகுதிகளில் ஏற்படுகிறது.

நோய் தொற்றின் கதிர் பகுதி பழுப்பு நிறமாக மாறி முடிவில் பதராக மாறிவிடுகிறது. நோய்க்கு பூசண இழையானது இடைப்பாடா மற்றும் இடையேயான செலுலலாரால் ஆனது. கொநிடியாக்கள் பேரிக்காய் வடிவிலும், 3 செல்கள்நிறமற்றதாகவும், 2 தடுப்பு சுவர்கள் கொண்டதாகவும் இருக்கும். கோனிடியாக்கள் இலை மேல் தோல் செல்கள் அல்லது இலைத்துளைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதை கட்டுப்படுத்த உழவியல் முறையில், நோயற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்