×

கந்தர்வகோட்டை அருகே ஆபத்தான மின்கம்பம்

கந்தர்வகோட்டை,அக்.11: கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒடிந்த நிலையிலும், மின்ஒயர்கள் தாழ்வாகவும் செல்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கந்தர்வகோட்டையில் அக்கச்சிப்பட்டியில் சுடுகாடு அருகே தனியாருக்கு சொந்தமான ரியல்எஸ்டேட் பகுதியில் உள்ள மின்கம்பம் பாதி ஒடிந்த நிலையிலும், தாழ்வாக மின்ஒயர்கள் செல்லும் படியாகவும் உள்ளது. ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். மாற்றி அமைக்க கோரிக்கை

Tags : Gandharvatte ,
× RELATED திருமயம் அருகே விநோதம்...