×

விவசாயிகளுக்கு அழைப்பு மகா ரதயாத்திரை விழிப்புணர்வு வாகனம்

ஜெயங்கொண்டம், அக்.11: மகா ரதயாத்திரை விழிப்புணர்வு வாகனம் ஜெயங்கொண்டம் வந்தடைந்தது. நர்மதை ஆற்றின் நதியின் தீர்த்தம் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்டு பின்னர் பாண்டிச்சேரியில் இருந்து நர்மதை யாத்திரையானது, தொடங்கி வரும்வழி தோறும் மக்களுக்கு தீர்த்தம் வழங்கியும் மக்கள் தரிசித்தும் வருகின்றனர். இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மூலமாக நதிகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை  பாதுகாக்கவும் நதிநீரை தாயாக வணங்கிடவும் பண்பாட்டுடன் கலந்து இருக்கும் பூஜா புஸ்கரத்தை மக்களிடமிருந்து வெளிக்கொணர வேண்டி மகா ரதயாத்திரை விழிப்புணர்வு வாகனம்  ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிற்கு வரப்பெற்றது. வாகனத்தில் இருந்த அம்மன் சிலைக்கு கருடானந்தா சாமி மூலம் பூஜைகள் நடத்தப்பட்டு தீபராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் பொதுமக்கள், வணிகர்கள், பாதசாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நர்மதை தீர்த்தத்தினையும் உத்திராட்சகொட்டைகள் மற்றும் பிரசாதமும் வாங்கி சென்றனர். நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் டாக்டர் பழனிவேல், மாநிலத் தலைவர் கார்த்திக்கேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமபாலமுருகன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ஐயம்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து முன்னணி நகரத் தலைவர் மணிகண்டன் வரவேற்றார். ரமேஷ் நன்றி கூறினார்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது