×

12 வயது சிறுமி மர்மச்சாவு மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேனி, அக். 11: தேனியில் சிறுமி சாவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று அகில இந்திய மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  தேனி அல்லிநகரில் 12 வயது சிறுமி கடந்த மாதம் 25ம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது  தற்கொலை என அல்லிநகரம் போலீசார் ஆரம்பத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி பிரேதத்தை வாங்க மறுத்தனர். இதையடுத்து, சிறுமி குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சிறுமி இறந்து மூன்று நாட்கள் கழித்து பிரேதம் அடக்கம் செய்யப்பட்டது.  இந்நிலையில் சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, நேற்று அகில இந்திய மாதர் சங்கத்தின் சார்பில் தேனி நகர் பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் வெண்மணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறுமியின்  சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags : Marmacchavu Matheran Association ,
× RELATED தேனி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களை சீரமைக்க பயணிகள் கோரிக்கை