×

தொலைநோக்கியில் விண்வெளியை ரசித்த மாணவிகள்

காரைக்குடி, அக்.11: காரைக்குடி அறிவியல் புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் வானின் அழகை மாணவிகள் கண்டு ரசித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காரைக்குடியில் அறிவியல் புத்தக கண்காட்சி கடந்த 5 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் அறிவியல் சம்பந்தமான ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தினந்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.இக்கண்காட்சியில் சிறப்பம்சமாக இரண்டு தொலைநோக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. தொலைநோக்கியில் இரவிலும் பகலிலும் வானில் உள்ள கோள்களை கண்டு ரசிக்கலாம்.
நேற்று பள்ளி மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு மனநலன் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இதில் 1500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : space ,
× RELATED இந்திய விண்வெளி வீரர்களுக்கு...