×

வைகோ கைது கண்டித்து மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.10: சென்னையில் வைகோ கைதுகண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மாலை, மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன் முன்னிலை வகித்தார். இதில், மாநில மருத்துவர் அணி துணைச்செயலாளர் சங்கேஸ்வரன், நிர்வாகிகள் சந்திரசேகர், விஜயகுமார், பாரூக்அலி, நல்லதம்பி, தைலப்பன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு போலீசார் மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Viggo ,protests ,
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...