×

திருச்செங்கோடு அருகே சீரான குடிநீர் வழங்க பிடிஓவிடம் மக்கள் மனு

திருச்செங்கோடு, அக். 10: திருச்செங்கோடு அருகே, மோளியப்பள்ளியில், சீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். திருச்செங்கோடு அருகே, எலச்சிபாளையம் ஒன்றியம் மோளிப்பள்ளி அருந்ததியர் காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு நீண்ட தூரம் செல்லவேண்டி இருந்தது.

3 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்தும், சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Tiruchengode ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு நவீன படுக்கை வழங்கல்