×

முத்தாலம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு ஏக்கருக்கு ரூ.308 மட்டும் பிரிமியம் சம்பா நெல்லுக்கு இன்சூரன்ஸ் பண்ணுங்க...

விருதுநகர், அக். 10:  ஏக்கருக்கு ரூ.308 பிரிமியம் செலுத்தி, சம்பா நெல்லுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் சிவஞானம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 243 தொகுப்பு வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், மாவட்டத்தில் திட்டத்தை செயல்படுத்தும் நியு இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொதுச்சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்ய வேண்டும். நெல் பயிரிடும் விவசாயிகள் திட்டத்தில் சேர கடைசி நாள் நவ.30. இறுதி நேர அவதியை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் விவசாயிகள் அக்.15ம் தேதிக்குள் பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.  
பயிர்காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் அதாவது ரூ.308 மட்டும் இன்சூரன்ஸ் பிரிமியமாக செலுத்தினால் போதும். பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு இழப்பீடு தொகை ரூ.20,550 வழங்கப்படும். திட்டத்தில் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க ஜெராக்ஸ், ஆதார் அட்டை நகல் இணைத்து கட்டணத்தொகையை செலுத்தி அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : festival ,Chamba Nell ,
× RELATED வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு