×

காரியாபட்டியில் கனமழை

விருதுநகர், அக். 10: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை அளவு மி.மீ வருமாறு: அருப்புக்கோட்டை -2, சாத்தூர் -12, திருவில்லிபுத்தூர்-4, சிவகாசி -4, விருதுநகர்-5, திருச்சுழி-4, ராஜபாளையம்-3, காரியாபட்டி-75.60, வத்திராயிருப்பு-14.80, பிளவக்கல்-14.6, வெம்பக்கோட்டை -5 என பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வருமாறு: 45 அடி உயரமுள்ள பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம்-34 அடி. அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 125.08 கனஅடி. 40 அடி உயரமுள்ள கோவிலாறு அணையின் நீர்மட்டம் 10 அடி. வினாடிக்கு நீர்வரத்து 8.07 கன அடி. 21 அடி உயரமுள்ள வெம்பக்கோட்டை அணையின் நீர்வரத்து 3 அடியும், 7 அடி உயரமுள்ள குல்லூர்சந்தை அணையின் நீர்மட்டம் 4 அடி. 31 அடி உயரமுள்ள சாஸ்தா கோவில் அணையின் நீர்மட்டம் 31 அடி. வினாடிக்கு 20 கனஅடி நீர்வரத்து உள்ளது. கோவிலார்பட்டி, ஆணைக்குட்டம், இருக்கன்குடி அணைகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.

Tags : Kariapatti ,
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...