×

நகை மதிப்பீட்டு பயிற்சி

சிவகங்கை, அக்.10:சிவகங்கை கூட்டுறவு மேலா ண்மை நிலையம் சார்பில் தெரிவித்ததாவது: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அக்.13 முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர வயது வரம்பு கிடையாது. பயிற்சி கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 550 செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். இச்சான்றிதழ்கள் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பணிக்கு சேரலாம். சுயமாக தொழில் தொடங்கலாம். கூடுதல் விபரம் அறிய சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி அருகே காஞ்சிரங்காலில் உள்ள சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் 79048 70745 என்ற செல் எண்ணிலும் தெடர்பு கொள்ளலாம்.

Tags :
× RELATED இளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்