×

புலியூர் அருகே உடைந்த குடிநீர் மினிடேங்க் மாற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்,அக்.10: புலியூர் அருகே உடைந்த நிலையில் உள்ள சின்டெக்ஸ் டேங்கினை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் புலியூரில் இருந்து கோயில்பாளையம் செல்லும் வழியில் குளத்துப்பாளையம் பகுதி உள்ளது. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. இந்த பகுதி மக்களின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு தெருமுனையில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. டேங்க் அமைக்கப்பட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், சில மாதங்களாக டேங்கில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பயன்படுத்தாத நிலையில் வீணாகி செல்கிறது.

இதனை மாற்றி புதிய டேங்க் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மோட்டார் போட்டு டேங்க் நிரம்பினாலும், மக்கள் பயன்படுத்தாமலேயே திரும்பவும் வீணாகி செல்கிறது. இதனால், திரும்ப திரும்ப மோட்டார் போடுவதாலும் மின்சார செலவும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உடைந்த நிலையில் உள்ள டேங்கினை மாற்றி புதிய டேங்க் வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Puliyur ,
× RELATED தேர்தல் காலங்களில் ேமாசமான சட்ட வரம்பு மீறல்களை பாஜ அரசு செய்கிறது