மணப்பாறையில் இருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்தை இடையபட்டி கடவூர் வழியாக இயக்க கோரிக்கை

தரகம்பட்டி, அக். 10: மணப்பாறையிலிருந்து தரகம்பட்டி வழியாக சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்தை இடையபபட்டி, கடவூர் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடவூர் ஒன்றியத்தில் மையப்பகுதியாக உள்ள தரகம்பட்டியிலிருந்து அதிகப்படியான பேருந்துகள் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதில் கடந்த திமுக ஆட்சியின்போது அப்போது எம்எல்ஏ காமராஜ் முயற்சியால் மணப்பாறை டெப்போவிலிருந்து சென்னைக்கு தரகம்பட்டி வழியாக இயக்கப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் சென்னைக்கு ஒரு அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டது. ஆனால் அது நிறுத்தப்பட்டது.

தற்போது சென்னை க்கு ஒரு அரசு பேருந்து மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. கடவூர் ஊராட்சி மக்கள் சென்னை பேருந்தை பிடிக்க வேண்டும் என்றால் தரகம்பட்டி வரவேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வீண் காலவிரயம் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி மணப்பாறையிலிருந்து வரும் சென்னை பேருந்தை நால்ரோடு, பொன்னணியாறு அணை, இடையபட்டி, கடவூர் வழியாக மீண்டும் தரகம்பட்டிக்கு இயக்கினால் இந்தப்பகுதி பொதுமக்கள் வேறு ஊருக்கு சென்று பேருந்துகள் மாறிசெல்ல வேண்டிய சூழ்நிலை இருக்காது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சென்னை பேருந்தை இடையபட்டி, கடவூர் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>