×

பூந்தமல்லியில் டெங்கு ஒழிப்பு பணி கலெக்டர் ஆய்வு

பூந்தமல்லி: பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பூந்தமல்லியில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு பணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 18, 19, 20 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று டெங்கு குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், பூந்தமல்லி பேருந்து நிலையம், குடிநீர் தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டார்.  வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவையும் பரிசோதனை செய்தார்.  வீடுகளின் அருகே தண்ணீர், குப்பை சேராமலும், டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கவும், தொற்று நோய் பரவாமல் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும், டெங்குவை தடுக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அவர் பொதுமக்களிடம் விநியோகித்தார். இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் கிருஷ்ணராஜ், பிரபாகர், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் டிட்டோ, வட்டாட்சியர் புனிதவதி, நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் பரிதாப பலி