×

கலெக்டர் அறிக்கை கொத்தனார் தச்சர்களுக்கு வெளிநாட்டில் வேலை

காஞ்சிபுரம்: கொத்தனார், தச்சர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசின் ஓஎம்சிஎல் (OMCL) நிறுவனம் மூலமாக துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 27 முதல் 45 வரையுள்ள கொத்தனார்கள், ஆபரேட்டர்கள், தச்சர்கள் மற்றும் போர்மேன்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலை சம்பந்தப்பட்ட விவரங்கள் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வளைதளமான www.omcmanpower.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். கொத்தனார், ஆபரேட்டர் மற்றும் தச்சர்களுக்கு மாத ஊதியம் ரூ23 ஆயிரம் மற்றும் மிகை பணி ஊதியமும், போர்மேன்களுக்கு மாத ஊதியம் ரூ38 ஆயிரமும் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் கூடுதல் ஊதியம், இலவச இருப்பிடம் மற்றும் அந்நாட்டின் சட்டதிட்டத்திற்கேற்ப இதர சலுகைகள் வழங்கப்படும்.

கொத்தனார், ஆபரேட்டர்கள் மற்றும் தச்சர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ECNR பாஸ்போர்ட் வைத்திருத்தல் வேண்டும். போர்மேன் வேலைக்கு டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். உரிய தகுதி மற்றும் விருப்பம் இருப்பின் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பதுடன் கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் 2 புகைப்படத்துடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள் (12ம் தேதி) காலை 10 மணிமுதல் 5 மணிவரை நடைபெறும் முதற்கட்ட நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கொssத்தனார், தச்சர் தொழில் 2 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் கொண்டவர்கள் உடன் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டும் இந்த நேர்காணலில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Collector ,carpenters ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...