×

கனமழையை கண்காணிக்க அரசு ஊழியர்களுக்கு ‘நைட் ஷிப்ட்’

திண்டுக்கல், அக். 10: கனமழை பாதிப்பை கண்டறியவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் 24 மணிநேரம் மூன்று ஷிப்ட்களில் அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் புயல் தாக்கம் காரணமாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. பருவமழைக்கு முன்பாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒருவாரமாக சாரல் மழை அவ்வப்போது பெய்து வருவதால் குளிர்ச்சியான பருவநிலை நீடித்து வருகிறது. மேலும் விரைவில் பருவமழையும் துவங்க உள்ளது. இதனால் கனமழையினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.60 இடங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று கருதி அதற்கான தற்காப்பு முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன. சப்கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இருந்து உடனடியாக தகவல் தெரிவிக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் இதுகுறித்து கண்காணிக்க 3 ஷிப்ட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 24 மணிநேரமும் அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட ஊழியர்கள் தங்கி வெள்ளம், பாதிப்பு குறித்த தகவல்களை கேட்டறியவும், தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி வரை இந்த ஷிப்ட்முறை நடைமுறையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...