×

நாசரேத் கல்லூரியில் திறமை தின விழா

நாசரேத்,அக்.10: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் திறமை தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தார். கல்லூரி சிற்றாலய பாடகர் குழுவினர் பாடல் பாடினர். சிவந்தி ஆதித்தனார் கல்லூரி முதல்வர் பாஸ்கர் ராஜபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவ, மாணவியருக்குப் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு முதல் இரு இடங்களைப் பிடித்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர். நிகழ்ச்சிகளை பெரியநாயகம் ஜெயராஜ், கிரேஸ்லின் ஜுலியானா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.    ஏற்பாடுகளை கல்லூரிச்செயலர் எஸ்.டி.கே. ராஜன், முதல்வர் அருள்ராஜ், நிதியாளர் குளோரியம் அருள்ராஜ், திறமை தின ஒருங்கிணைப்பாளர்கள் சிந்தியா செல்வகுமாரி, ஜெயபாலன் கென்னடி, அந்தோணி செல்வகுமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Nasserat College ,
× RELATED நாசரேத் கல்லூரியில் தேசிய ஒற்றுமை தினம்