×

சாத்தான்குளத்தில் மகளிர் காவல் நிலையம்

சாத்தான்குளம், அக். 10: நெல்லை டிஐஜி கபில்குமார்சரத்கர் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆய்வு செய்ய வந்தார். அங்குள்ள அலுவலக கோப்புகளை ஆய்வு மேற்கொண்ட அவர் டிஎஸ்பி பாலச்சந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது சாத்தான்குளம் வர்த்தக சங்க துணைத்தலைவர் ஜோதிமணி. சங்க பொருளாளர் பாபுசுல்தான் ஆகியோர் டிஐஜியை சந்தித்து மனு அளித்தனர்.
 மனுவில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் தாலுகா தலைமையிடமாக உள்ளது. மேலும் இங்கு ஓருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. சாத்தான்குளத்தை மையமாக கொண்டு 100க்கு மேற்பட்ட மகளிர் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன. ஆனால் மகளிர் குற்றங்கள் விசாரிக்க மகளிர் காவல் நிலையம் இல்லை. சாத்தான்குளத்தில் மகளிர் காவல் நிலையம் அமைப்பதாக 2003ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் அமைக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மகளிர் தொடர்பாக வழக்குகள் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  விசாரிக்கப்படுகின்றனர். இதனால்இப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று மிகுந்த சிரமம் அடையும் நிலை உள்ளது. ஆதலால் சாத்தான்குளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்ற டிஐஜி, சாத்தான்குளத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க ஆவண செய்வதாக உறுதி அளித்தார். அப்போது சாத்தான்குளம் டிஎஸ்பி பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சாத்தான்குளம் ராஜாசுந்தர், நாசரேத் ராஜி,தட்டார்மடம் கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags : Women ,Police Station ,Sattankulam ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிரைவர் கைது