×

குளத்தூர் பகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

குளத்தூர்,அக்.10: குளத்தூர் பகுதியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி கிராமங்களான குளத்தூர், வைப்பார், வேடபட்டி, விருசம்பட்டி, வேம்பார் தெற்கு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடந்தது. விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து தலைமை வகித்தார். மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் குபேர்இளம்பரிதி, வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிராஜ், சந்திரமோகன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் எப்ரோமீனாமேரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி லெனின், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஜோசப், ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வேல்முருகன், ஊராட்சி செயலாளர்கள் கெங்குமணி, செல்வப்பாண்டி, பாலமுருகன்ஆதித்தன், காளிச்சாமி, முருகன், ஆரோக்கியராஜ், தர்மநேசசெல்வின், தங்கமாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Kulathur ,area ,polling agents meeting ,DMK ,
× RELATED வைப்பார் மல்லம்மாள் கோயில் திருவிழா