×

சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே... ஓடும் மின்சார ரயிலில் மதுஅருந்தி ஏட்டு நண்பர்களுடன் கும்மாளம்: தட்டிக்கேட்ட சினிமா கம்பெனி ஊழியர் மீது தாக்குதல்

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் மின்சார ரயில் பயணத்தின் போது மது அருந்தியதை தட்டி கேட்ட சினிமா கம்பெனி ஊழியரை சரமாரியாக தாக்கிய ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம், தண்டுரை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (47). இவர், சென்னையில் உள்ள சினிமா படப்பிடிப்பு கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, குணசேகரன் வேலை முடிந்து வில்லிவாக்கத்தில் இருந்து மின்சார ரயிலில் ஏறி பட்டாபிராமிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் ரயிலில் வெண்டர் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த ரயில் ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, அதே பெட்டியில் பயணம் செய்த மூன்று பேர் மது அருந்தியதுடன், புகைபிடித்துகொண்டு வந்தனர்.

இதனை பார்த்த, குணசேகரன் அவர்களை கண்டித்தது, ஹெல்ப் லைனுக்கு போன் செய்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் குணசேகரனை சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். இதில் அவருக்கு முகம், கை கால்களில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த சக பயணிகள் ரயில் ஆவடிக்குகு வந்தவுடன் மூவரையும் பிடித்து ஆவடி ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சப்.இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்கு பதிவு செய்து மூவரிடமும் விசாரணை நடத்தினர். அதில், குணசேகரனை தாக்கியது அரக்கோணம், ராணியம்மாள் தெருவை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு இளங்கோவன் (46), அரக்கோணம் சுவால்பேட்டையை சேர்ந்த ரயில்வே ஊழியர் சசிகுமார் (44), அரக்கோணம், விண்டர்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன சூப்பர்வைசர் கேசவன் (52) ஆகியோர் என தெரிந்தது.  இதனை அடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் ஆவடி ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : friends ,cinema company employee ,
× RELATED சூனாம்பேடு அருகே பரபரப்பு; கார்...