×

திசையன்விளையில் தாமிரபரணி புஷ்கர ரதத்திற்கு வரவேற்பு

திசையன்விளை, அக். 10:   கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட தாமிரபரணி புஷ்கரணி ரதம், பணகுடி, வள்ளியூர்  வழியாக திசையன்விளை வந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ரதத்திற்கு சிறப்பு  பூஜை நடத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் விஷ்வ ஹிந்து பரிஷத்  தலைவர் பெரி குழைக்காதர், முருகையா, பாஜ கிழக்கு மாவட்ட பிரசார பிரிவு  தலைவர் பால்சாமி, ஒன்றியத் தலைவர் ராஜன், ராதாகிருஷ்ணன், சாந்தி ராகவன்,  தர்மராஜ், சமுத்திரபாண்டியன், அரிகிருஷ்ணன், சமக ஒன்றியச் செயலாளர் சரவணன்,  நிகிலா, வசந்தி, தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Tamarabarani Pushkara ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி...