×

குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

தென்காசி, அக்.10: குற்றாலம்  குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 13ம்தேதி தேதி தேரோட்டம் நடக்கிறது.பிரசித்தி பெற்ற குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 5.50 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது. கொடியை ஜெயமணிசுந்தரம்பட்டர், கணேசன்பட்டர், பிச்சுமணி என்ற கண்ணன்பட்டர், மகேஷ்பட்டர் ஆகியோர் ஏற்றினர். இதில் கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி, இலஞ்சி அன்னையாபாண்டியன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், வர்த்தக சங்க தலைவர் காவையா, ஜோதிமுருகன், வேல்ராஜ், சர்வோதயா கண்ணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பரமசிவன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவனடியார்களின் சிவபூத கன வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. விழாவில் தினமும் காலை. மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடக்கிறது.
12ம்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 13ம்தேதி காலை 8.20 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. 15ம்தேதி காலை 9.30 மணிக்கும் மாலை 7 மணிக்கும் நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 16ம்தேதி காலை 10.30 மணிக்கு சித்திரசபையில் நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 18ம்தேதி காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரியும் நடக்கிறது. 11 மணிக்கு மேல் திருவிலஞ்சிக்குமாரர் பிரியாவிடை கொடுக்கும் உபசாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், உதவி ஆணையர் செல்வகுமாரி மற்றும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Kutralanatha Swami ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!