×

சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சர்வ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வீரவநல்லூர், அக்.10: சேரன்மகாதேவி பேரூராட்சியில் இருமடங்காக உயர்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் குடிநீர் வரி உயர்வை கண்டித்து சர்வ கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் சொத்துவரியை மட்டும் இருமடங்காக உயர்த்தி பொதுமக்களை வதைக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் சேரன்மகாதேவியில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் கோழிகுஞ்சு பொறிப்பகம், மலையடிவாரத்தில் குப்பைகளை கொட்டுதல், கன்னடியன் கால்வாயில் சாக்கடை கழிவுகளை கலந்துவிடுதல் உள்ளிட்ட பல்வேறு குறைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.


இதில் திமுக ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு, பேரூர் கழக செயலாளர் சுடலையாண்டி, மாவட்ட இலக்கியஅணி மனிஷா செல்வராஜ், மாவட்ட வர்த்தகஅணி துணை அமைப்பாளர் மோனிகா ரவிசங்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மார்ட்டின், மாவட்ட சிறுபான்மை அணி சாலமன் டேவிட், காங்கிரஸ் நகர செயலாளர் முருகன் ரவிசந்தர், சிறுபான்மைபிரிவு சுல்தான், மாவட்ட தலைவர் பாக்கியராஜ், மதிமுக குட்டிபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாதவன், திமுக, காங்கிரஸ், மதிமுக, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை திமுக பேரூர் செயலாளர் சுடலையாண்டி செய்திருந்தார்.

Tags : demonstration ,government ,Cheranmakadevi ,
× RELATED சேரன்மகாதேவியில் கோயில் கொடை விழாவில் மோதல்