2 வாலிபர்களை தாக்கிய 4 பேர் கைது

திருவையாறு, அக். 10: திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (29). அதே தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (25). இவர்கள் இருவரும் தஞ்சையில் பைக்குக்கான உதிரி பாகங்களை வாங்கி விட்டு நடுக்காவேரிக்கு பைக்கில் வந்தனர். அப்போது நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்த பொழிலரசன் (18), தைலரசன் (16), ஆவிக்கரை இரட்டைகோவிலை சேர்ந்த மணிகண்டன் (18), வருண்பிரசாத் (17) ஆகியோர் பைக்கில் கண்டியூர் நோக்கி வந்தனர். திருவாலம்பொழில் மெயின்ரோட்டில் வரும்போது பொழிலரசன், தைலரசன், மணிகண்டன், வருண்பிரசாத் ஆகிய 4 பேரும் சுரேஷ், சண்முகவேல் ஆகியோரை வழிமறித்து நீங்கள் என்ன ஊரில் பெரிய ஆளா என்று திட்டி கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த சுரேஷ், சண்முகவேல் ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி சப்இன்ஸ்பெக்டர் கனகதாசன் வழக்குப்பதிந்து பொழிலரசன், தைலரசன், மணிகண்டன், வருண்பிரசாத் ஆகியோரை கைது செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் இளம்சிறார் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு 4 பேரையும் இளம்சிறார் சிறையில் போலீசார் அடைத்தனர். மூதாட்டி சடலம்:  திருக்காட்டுப்பள்ளி அருகே பாதிரக்குடி அடுத்த புதூர் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிரேதம் காணப்பட்டது. இதுகுறித்து ேதாகூர் ேபாலீசாருக்கு விஏஓ குணசுந்தரி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலையோரம் கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : youths ,
× RELATED மதகடிப்பட்டில் வாகன சோதனை மோட்டார் பைக் திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்