×

வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

நாகர்கோவில், அக்.9: நாகர்கோவில் அருகே சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸ்சலன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில்,  டெல்லி சிபிஎஸ்இ பயிற்சி நிறுவனம் குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமை நடத்தியது. மத்திய அரசின் சிபிஎஸ்இ-யின் கீழ் 7 சென்டர் ஆப் எக்சலன்ட்ஸ் பயிற்சி நிலையங்கள் இயங்குகின்றன. இதில் தென் மாநில சிபிஎஸ்இ சிஓஇ பயிற்சி நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி நிலையம் தென் மாவட்டங்களுக்கான பயிற்சி முகாமை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸ்சலன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் நடத்தியது. கோவை ஸ்டேன்ஸ் பள்ளி முதல்வரும், சிஓஇ அமைப்பின் தலைமை பயிற்சியாளருமான பெஞ்சமின் பயிற்சியளித்தார்.

ஆசிரியர் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயல்முறை பயிற்சிகள் நடத்தப்பட்டன. பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன. வினாத்தாள் தயாரிப்பு, கற்பித்தல் முறைகள், வகுப்பறை மேலாண்மை, வினாத்தாள் ஆய்வு, இணைந்து செயல்படுதல், ஆசிரியர் மாணவர் உறவு, உரையாடல் முதலான கருத்துக்களின் அடிப்படையில் கலந்துரையாடலும் நடைபெற்றன. பயிற்சி பாசறை பயிற்சியாளர் பெஞ்சமின் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முதல்வர் லதா வரவேற்று பேசினார். வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்து பயிற்சி பெற்ற சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கினார். ஆசிரியை பெனிசயா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

Tags : Training camp ,teachers ,Vince CBSE School ,
× RELATED இயற்கை நல உணவு பயிற்சி முகாம்