×

கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில்கள் பாதுகாப்பு பணியில் போலீசார் நியமனம்

கன்னியாகுமரி, அக்.9: குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆகியவை பிரசித்தி பெற்ற கோயில்கள் ஆகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் இக்கோயில்களில் திருவிழா காலங்கள் தவிர மற்ற நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு நிரந்தர போலீசார் நியமிக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மெட்டல் டிடெக்டர் சோதனையில் முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் மேற்படி 2 கோயில்களிலும் நிரந்தரமாக போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் எஸ்ஐ மகேந்திரன், பெண்காவலர் சுடலைமுத்து ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் பக்தர்களை மெட்டர் டிடெக்டர் வழியாக முறையாக சோதனை நடத்தி கோயிலுக்குள் அனுமதித்தனர்.

மேலும் பெண்பக்தர்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலிலும் ஒரு ஆண் எஸ்ஐ மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். குமரியில் பிரசித்திபெற்ற கோயிலில் பாதுகாப்பு பணியில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kanyakumari ,temples ,
× RELATED கன்னியாகுமரி மக்களவை தேர்தல்-...