×

மண்டல கால்பந்து போட்டி கிட் அண்டு கிம் கல்லூரி வெற்றி

காரைக்குடி, அக். 9: அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல அளவிலான ஆண்கள் பிரிவு கால்பந்து போட்டிகள் நடந்தது. இதில் மண்டலத்துக்கு உட்பட்ட 27 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்றன.
இதில் காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி அணி கலந்து கொண்டு முதல் சுற்றில் 2:0 என்ற கோல் கணக்கில் முகமது சதக் பொறியியல் கல்லூரி அணியை வென்றது.
இரண்டாவது சுற்றியில் 4:0 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி அணியும், அரையிறுதியில் 2:0 என்ற கோல் கணக்கில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணியை வென்றது. அதன்பின் நடந்தது இறுதி போட்டியில் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கிட் அண்டு கிம் கல்வி நிறுவனங்களின் தலைவர் அய்யப்பன், பொருளாளர் ராமசுப்பிமணியன், ஆலோசகர் கலியமூர்த்தி, இயக்குநர் அண்ணாமலை, முதல்வர்கள் (பொ) கார்த்தி, சுசில்குமார், டீன் நாகநாதன், உடற்கல்வி இயக்குநர் பழனியப்பன் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Kim College Won ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்