×

பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர் வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.3.20 லட்சம் நிதி உதவி வழங்கல்

கரூர், அக். 9: பாப்புலர் முதலியார் வாய்க்கால் விஸ்தரிப்பு ஆலோசனைக்கூட்டம் கரூர் அருகே உள்ள வாங்கலில் நடைபெற்றது. சங்க தலைவர் நடராஜன், செயலாளர் கனகராஜ், பொருளாளர் ஜெகநாதன், முன்னாள் எம்எல்ஏ சிசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொந்த நிதியில் இருந்து ரூ.3.20 லட்சம் வழங்கினார், பின்னர் அவர் பேசியது: பாப்புலர் முதலியார் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சர்வே எடுத்து வாய்க்கால் வெட்டப்படும். காவிரியில் 2 லட்சத்து 75 ஆயிரம் கன அடி நீர் வந்தும் வாய்க்காலுக்கு தண்ணீர் வரவில்லை. மணல் எடுத்ததால் லெவல் கீழே போய்விட்டது என்றனர்.
காவிரியில் புகழூரில் தடுப்பணை கட்டும் திட்டத்தை கதவணையாக கட்டும் வகையில் முதல்வரிடம் கோரிக்கை வைத்து சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது.கரூர் மாவட்டம் நெரூரையும் திருச்சி மாவட்டம் உன்னியூரையும் இணைக்கும் வகையில் ஆற்றுப்பாலம் கட்டுவதற்கும் சர்வே பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் பாலம் கட்டப்படும். வாங்கல் காவிரி பாலத்திற்கு செல்ல சுற்றுவட்ட சாலை யாருக்கும் பாதிப்பின்றி அமைக்கப்படும் என்றார்.

Tags : Vijayabaskar ,
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...