×

அமாவாசையை முன்னிட்டு சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

க.பரமத்தி, அக்.9: க.பரமத்தி அருகே சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில் சூடாமணி ஊராட்சிக்குட்பட்ட எல்லமேடு அருகே மாசாணியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திவிநாயகர், கருப்பண்ணசுவாமி, ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, துர்க்கை, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் வைக்கப்பட்டு, முக்கிய விரத விஷேச நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருவது வழக்கம். அமாவாசை தினமான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் குப்பம் பொன்காளியம்மன் கோயில். அத்திபாளையம் பெரியபொன்னாட்சியம்மன், குப்பம் பெரியகாண்டியம்மன், உப்புப்பாளையம், சக்திவீரமாத்தியம்மன், புன்னம் அங்காளம்மன், ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Tags : Soodamani Masaniamman ,occasion ,
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...