×

பரமத்தி ஒன்றிய பகுதியில் செயல்படாத குவாரிகளில் கேரள மருத்துவ கழிவுகள் தடுத்த நிறுத்த கோரிக்கை

கரூர், அக்.9: பரமத்தி ஒன்றிய பகுதிகளில் செயல்படாத குவாரிகளில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் சாமானிய மக்கள் கட்சி சண்முகம் அளித்த மனுவில், பரமத்தி ஒன்றியம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள செயல்படாத குவாரிகளில் தொடர்ந்து லாரிகள் மூலம் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதற்கு குவாரி உரிமையாளர்களுக்கு அதிக தொகை கொடுப்பதால், சுகாதாரகேட்டை ஏற்படுத்த அனுமதிக்கிறார். ஆய்வு செய்து பேராபத்தை விளைவிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்குளத்துப்பாளையம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்கள் பழைய சாயசுத்திகரிப்பு குழாய்கள் வழியாக தொடர்ந்து சாயக்கழிவுகளை பாசன வாய்க்காலில் கலந்து இரவு நேரங்களில் விடுகின்றனர். பாசன வாய்க்கால் செல்லும் பகுதி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள், செடிகொடிகள் அடர்ந்த புதர் பகுதியாக உள்ளதால் சாயக்கழிவுகளை விடுவதற்கு வசதியாக போய்விட்டது. பிளீச்சிங் கெமிக்கலை ஸ்டாக் தொட்டியில் கலந்துவிடடு வெண்மை நிறத்தில் தள்ளுவண்டியில் செட்செய்து அதிக திறன்களை கொண்ட மின்மோட்டார் மூலம் மணிக்கு 75 ஆயிரம் லிட்டர் சாயக்கழிவுநீரை கலக்கின்றனர். வெங்கமேடு, குளத்துப்பாளையம் பகுதியில் அனைத்து சாக்கடை கழிவுநீரும் பாசனவாய்க்காலில் கலப்பதால் சாயக்கழிவுநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்துசெல்கிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக இந்நிறுவனங்களை மூட உத்தரவிட்டு, மக்களின் வாழ்வாதாரம், விவசாயம், நிலத்தடிநீர் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டம் என குறிப்பிட்டுள்ளார்.


கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சுக்காம்பட்டி வேப்பங்குடி. பண்ணப்பட்டி கிராமம் சந்தனக்கருப்பசாமி கோயில் 87 ஊர் ஆப்பாடியான் பங்காளிகள் அளித்த மனு:கருப்பசாமி கோயிலில் ஆகஸ்டு 30ம் தேதி இரவு சிலைகளை உடைத்து தீயிட்டு கொளுத்தியது குறித்த புகாரின்மீது அறநிலையத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், அய்யர்மலை செயல் அலுவலர் மறுத்து வந்தார். தவறான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறார். திருச்சி இணை ஆணையர் கேட்டும் அறிக்கை செயல்படுத்தாமல் சந்தேகம் என புகார் அளிக்கப்பட்டவர்களை வைத்தே சிலை மற்றும் குதிரை சிலைக்கு வர்ணம் பூசுவது மற்றும் மராமத்து வேலைகளை செய்துவரும் அதிகாரியின் செயல் வேதனை அளிக்கிறது. இரண்டு தரப்பினர் இடையே பிரச்னையை ஏற்படுத்தி பூஜையை நடத்த விடாமல் செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இந்த வாரம் பூஜை நல்லமுறையில் நடைபெற இணை ஆணையர் உத்தரவின்படி பூஜை செய்ய தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும். வேறுசெயல் அதிகாரியை தக்காராக நியமிக்க வேண்டும். சிலைகளை தீவைத்து சேதப்படுத்தியவர்களை கண்டுபிடித்து, பூஜை நல்ல முறையில் நடைபெற காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Kerala ,ARM area ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...