×

மஹா புஷ்கர விழா ஏற்பாடு தாமிரபரணி நதிக்கரைகளில் கலெக்டர் ஷில்பா ஆய்வு

அம்பை,  அக். 9:  நெல்லை மாவட்டத்தில் மகா  புஷ்கர விழா நடைபெறும் தாமிரபரணி நதிக்கரைகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்ட கலெக்டர் ஷில்பா, பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முறையாக செய்துகொடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்குப் பிறகு மகா புஷ்கர  விழா  வரும் 11ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை  நடக்கிறது. இதையொட்டி பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையில் உள்ள முக்கிய தீர்த்தக் கட்டங்களில் தாமிரபரணிக்கு மஹா புஷ்கர விழா நடக்கிறது. விழா நடைபெறும் தாமிரபரணி நதிக்கரை பகுதிகளை  தென்  மண்டல ஐஜி டிஐஜி சண்முகராஜேஸ்வரன், டிஐஜி கபில்குமார் சரத்கர்,  எஸ்பி அருண் சக்தி குமார் பார்வையிட்டு ஆய்வுநடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக புஷ்கர விழா நடைபெறும் தாமிரபரணி நதிக்கரை பகுதிகளை கலெக்டர் ஷில்பா நேற்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் கோயில் கன்வ தீர்த்தம்,  ஆற்றுப்பாலம் அருகே உள்ள பிருகு தீத்த கட்டம், மாதா தாமிரபரணீஸ்வரர் ஆலயம்,  அம்பை காசிநாதர் கோயில் படித்துறை மற்றும் பக்தர்கள் நீராடும்  நதிப்பகுதி மற்றும் ஆரத்தி பூஜை நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர், பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும்  முறையாக செய்துகொடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர்  முத்துக்குமார், அம்பை நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், கல்லிடைக்குறிச்சி  மாதா தாமிரபரணி அறக்கட்டளை தலைவர் டாக்டர் பத்மநாபன்,  செயலாளர் ஜெய்சங்கர், அப்துல்கலாம் நண்பர்கள் குழு  கார்த்திக், ஓய்வுபெற்ற  டிஎஸ்பி கிருஷ்ணன்,மூர்த்தி,  அம்பை புஷ்கர கமிட்டி நிர்வாகிகள்  வாசுதேவராஜா, பண்ணை சந்திரசேகரன், ரமேஷ், சண்முகம் உள்ளிட்ட புஷ்கர கமிட்டி  நிர்வாகிகளிடம் இதுகுறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். ஆய்வின்போது சப்-  கலெக்டர் ஆகாஷ், திட்ட  அலுவலர் பழனி, தாசில்தார் ராஜேஸ்வரி, துணை தாசில்தார் செலின் கலிச்செல்வி,  பேரூராட்சிகளுக்கான உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், உதவி செயற்பொறியாளர்கள்  வாசுதேவன், தங்கப்பாண்டியன், ஓவர்சீயர் சரவணன், சுகாதார ஆய்வாளர்  சிதம்பரராமலிங்கம் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
வீரவநல்லூர்: இதே போல் தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் சேரன்மகாதேவி வியாச தீர்த்தக் கட்டத்தில் நடந்து வரும் பல்வேறு சீரமைப்பு பணிகளையும் கலெக்டர் ஷில்பா  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாசில்தார் சொர்ணம், செயல் அலுவலர் தேவராஜ், ஆர்ஐ ஹமீதாபேகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Shilpa ,river basins ,Thamiraparani ,Maha Pushkara Festival ,
× RELATED புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா...