×

தெற்கு கள்ளிகுளத்தில் தேங்கும் மழை நீரால் நோய் பரவும் அபாயம்

ராதாபுரம், அக். 9: தெற்கு கள்ளிகுளத்தில் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் கழிவுநீரோடு கலந்து தேங்கிநிற்பதால் நோய்பரவும் அபாயம் நிலவுகிறது. இதை சீரமைக்குமாறு முன். பஞ். தலைவரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ஜோசப் பெல்சி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஷில்பாவுக்கு அனுப்பியுள்ள மனு:
 தெற்கு கள்ளிகுளம் பனிமாதா மார்க்கெட் திருச்சிலுவை ஆங்கிலப்பள்ளி மற்றும் மார்க்கொட் தெருக்களில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து நாள்கணக்கில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய்பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் பலனில்லை. இதேபோல் மார்க்கெட் தெரு மேல கள்ளிகுளம் முதல் பள்ளிவாசல் வரையிலான பகுதிகளை உடனடியாக சீரமைக்குமாறு ராதாபுரம் பிடிஓ அலுவலகத்தில் பல மாதங்களாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கலெக்டர், இப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சீரமைக்க முன்வர வேண்டும்.

Tags : Kallikulam ,
× RELATED புகையிலை பதுக்கியவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை