×

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குருவிகுளம் வட்டாரத்தில் வேளாண் குழுவினர் ஆய்வு

திருவேங்கடம், அக். 9: குருவிகுளம் வட்டாரத்தில்  ஏ.கரிசல்குளம்,   கலிங்கப்பட்டி, நடுவப்பட்டி கிராமங்களில்   படைப்புழுக்கள் தாக்குதலால் மக்காச்சோளப்  பயிர்கள் சேதமடைந்தன.
 இதையடுத்து நெல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்  செந்தில்வேல்   முருகன் தலைமையில் வேளாண் உதவி இயக்குநர் குருவிகுளம்  (பொறுப்பு) நயினார்   முகமது, வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு)  நெல்லை லட்சுமி மற்றும்   குருவிகுளம் வட்டார துணை வேளாண் அலுவலர்  ராஜசேகர், வேளாண் அலுவலர் வனிதா   தேவி முன்னிலையில் அனைத்து உதவி வேளாண்  அலுவலர்களும் பல்வேறு குழுக்களாக மக்காச்சோளம் பயிரிட்ட வயல்களுக்கு சென்று படைப்புழுக்களால் பாதிப்பு ஏற்பட்டனவா? என்பது குறித்து நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் பாதிக்கப்பட்டிருந்த பயிர்களை காப்பாற்றுவதற்கான வழிமுறை தொடர்பாக நடவடிக்கை   மேற்கொண்டனர்.

Tags : crew attack ,region ,Kurukivilam ,farm team ,
× RELATED தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை...