×

கந்தர்வகோட்டை அருகே காட்டாறு செல்லும் பாதையில் கிராவல் மண்ணால் தடுப்பு

கந்தர்வகோட்டை, அக்.9:  கந்தர்வகோட்டை அருகே காட்டாறு செல்லும் பாதையில் கிராவல் மண் கொண்டு சிலர் தடுப்பு ஏற்படுத்தியிருப்பதால் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மழை தண்ணீர் அதிகமாக வந்தால் கந்தர்வகோட்டை நகருக்குள் செல்லும் அபாயம் உள்ளது. உடனடியாக சம்பந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி சாலை மற்றும் பழைய கந்தர்வகோட்டை, கோமாபுரம், தச்சங்குறிச்சி போன்ற பகுதிகளில் மழை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தாளவாரி பாலம் வழியாக மட்டங்கால் வழியாக பல கிராமங்களுக்கு மழை தண்ணீரை கொண்டு செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் அக்கச்சிப்பட்டி சுடுகாடு அருகே உள்ள காட்டாறு பாதையில் சிலர் கிராவல் மண் கொண்டு தடுப்பு ஏற்படுத்தி மழை தண்ணீர் செல்ல முடியாதப்படி அடைத்துள்ளனர்.
    இதனால் அதிகமான மழையின்போது வரப்படும் மழை தண்ணீர் காட்டாறு பாதையில் செல்லாமல் நகருக்குள் செல்லும் விதமாக கிராவல் மண்ணை கொண்டு ஒரு சிலர் அடைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் சிலர்  புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். சம்பந்தபட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gandharvatte ,Katharavu ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே சொத்து தகராறு...