புதுடெல்லி: ‘ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிதி சலுகையை எந்த ஒரு குடும்பமும் தினசரி தேவைக்கு பயன்படுத்த முடியாது’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்கவும், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாத சலுகை திட்டத்தை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிவித்தார். இதனை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டரில், ‘ஒன்றிய நிதி அமைச்சர் அறிவித்த பொருளாதாரத் தொகுப்பை எந்த ஒரு குடும்பமும் தங்களின் வாழ்க்கை, உணவு, மருந்து, குழந்தைகளின் பள்ளிக் கட்டணங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியாது. இது நிதி சலுகை அல்ல, இன்னொரு போலி’ என கூறி உள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், ‘‘கடனில் மூழ்கிய எந்த தொழிலுக்கும் வங்கிகள் கடன் தராது. அதே போல கடன் சுமையில் இருக்கும் தொழில் நிறுவனர்கள் மேலும் கடன் வாங்க விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு தேவை கடன் அற்ற முதலீடுதான். அதிகமான விநியோகம் என்பது தேவை அதிகரிப்பு என அர்த்தமாகி விடாது. தேவை அதிகரிப்பு தான் உற்பத்தியை பெருக்கும். தேவை அதிகரிக்காவிட்டால் வேலைவாய்ப்பு பறிபோகும், வருமானம் சரியும். எனவே தற்போதைய சூழலில் ஏழைகள், நடுத்தர மக்களின் கைகளுக்கு பணம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் தேவை அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் மீளும்’’ என்றார்….
The post நிதி சலுகை அல்ல; இன்னொரு போலி: ராகுல் விமர்சனம் appeared first on Dinakaran.
