×

சாயல்குடி அருகே கண்மாயில் இறந்து மிதந்த மீன்கள்

சாயல்குடி:  சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் கண்மாயில் மீன்கள் செத்து மிதந்ததால் வருவாய்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராமத்தின் நுழைவு பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. கடந்தாண்டு பெய்த மழைக்கு இக்கண்மாயில் தண்ணீர் நிரம்பியது. பிறகு ஜனவரி மாதம் பெய்த கனமழைக்கு கண்மாய் முழுவதுமாக நிரம்பியது. இதனால் கிராம மக்கள் சார்பாக சுமார் 2 ஆயிரம் கெண்டை, கெளுத்தி வகை வளர்ப்பு மீன் குஞ்சுகளை விலைக்கு வாங்கி விட்டனர். நன்கு வளர்ந்து வந்தநிலையில் நேற்று மதியம் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இது குறித்து கிராமமக்கள் வருவாய்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடலாடி தாசில்தார் சேகர், மண்டல துணை தாசில்தார் சாந்தி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கிராம மக்களிடம் விசாரனை மேற்கொண்டனர். பிறகு தண்ணீரின் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.  தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தண்ணீருக்குள் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் மீன்கள் இறந்திருக்கலாம். அல்லது தண்ணீரில் விஷம் போன்ற நச்சு தன்மை பொருள் ஏதும் கலக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post சாயல்குடி அருகே கண்மாயில் இறந்து மிதந்த மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,Pillayarkulam pond ,Kanma ,Dinakaran ,
× RELATED சாயல்குடி, கடலாடி பகுதியில் ேகாயில்...