×

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்தும், காவிரி நிபுணர் குழுவை கலைத்த ஒன்றிய அரசை கண்டித்தும் மயிலாடுதுறையில் விவசாயிகள் கருப்பு கொடியுடன் நேற்று காவிரி ஆற்றில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் போராட்டம் நடத்தினர்.மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டினால் கர்நாடகாவில் இருந்து வரும் உபரிநீர் தமிழகத்திற்கு வராது. இதனால் டெல்டா மாவட்டம் வறண்ட பூமியாகிவிடும் என்ற அச்சத்தில் தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்தும், காவிரி நிபுணர் குழுவை கலைத்த ஒன்றிய அரசைக் கண்டித்தும் மயிலாடுதுறையில் கிட்டப்பா பாலம் அருகே விவசாயிகள் மற்றும் பெண்கள் நேற்று கருப்பு கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் கலந்து கொண்ட கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் முருகன் மற்றும் விவசாயிகள், விவசாய பெண்கள் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நிபுணர் குழுவை கலைத்த ஒன்றிய அரசை கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர்….

The post மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்: மயிலாடுதுறையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka Government Dam ,Megadadu ,Mayeladuthur ,Mayiladuthura ,Karnataka government ,Kaviri Expert Group ,Caviri River ,Cloudadu ,Mayeladuthu ,Dinakaran ,
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...