×

டிக்-டாக் பிரபலங்கள் மீது குவியும் புகார்கள்.: காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்

ராமநாதபுரம்: டிக்-டாக் பிரபலங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிபி முத்து, திருச்சி சாதனா, பேபிசூர்யா, சிக்கா என்ற‌ சிக்கந்தர் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி பதிவிட்டு வருகின்றனர். இதனை மாணவர்கள் மற்றும்   சிறுவர், சிறுமியர்கள் அந்த வீடியோக்களை காண வேண்டிய சூழல் ஏற்பட்டு, மன பாதிப்பதாகவும் எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அந்த வீடியோக்கள் அனைத்தையும் நீக்க நடவடிக்கை எடுக்க கோரி, கீழக்கரையை சேர்ந்த வக்கீல் முஹைதீன் இப்ராஹிம் என்பவர் ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளருக்கு தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மனு, அனுப்பிய ஒரே நாளில் ரவுடி பேபி சூர்யா என்பவர் மட்டும் தனது வீடியோக்களை நீக்கி உள்ளார். இந்நிலையில் அவர் தபால் மூலம் அனுப்பிய புகார் ராமநாதபுரம் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்று சைபர் கிரைம் துறையில் ஒப்படைக்கப்பட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் ஆய்வாளர் சரவண பாண்டியனிடம் கேட்டபோது, கீழக்கரை முகைதீன் இப்ராகிம் அனுப்பிய புகார் மனு கிடைக்கப் பெற்று விட்டது. இந்த புகார் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உரிய ஆலோசனை பெற்று சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். …

The post டிக்-டாக் பிரபலங்கள் மீது குவியும் புகார்கள்.: காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,GB Muthu ,Tiruchi Sadhana ,Babysurya ,Tik ,
× RELATED மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கோடை மழை: உழவு பணியை துவக்க அறிவுறுத்தல்